காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கராபுரம் அருகே காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-04-09 16:18 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் பாசில் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், டாக்டர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு காசநோய்க்கான அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் மணி, புஷ்பா மற்றும் பள்ளி மாணவர்கள், சுகாதார செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்