மீன் விற்பனையாளர்களுக்கு வட்டி இல்லா தொழில் கடன்- மீனவ தொழிலாளர் சங்கம்
மீன் விற்பனையாளர்களுக்கு வட்டி இல்லா தொழில் கடன் வழங்க வேண்டும் என மீனவ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நீடாமங்கலம்:-
மீன் விற்பனையாளர்களுக்கு வட்டி இல்லா தொழில் கடன் வழங்க வேண்டும் என மீனவ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பேரவை கூட்டம்
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க முதலாம் ஆண்டு பேரவை கூட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பில் நடந்தது. கூட்டத்துக்கு முருகேசன் தலைமை தாங்கினார். திலீபன் வரவேற்றார். மீனவர் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சின்னத்தம்பி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உள்நாட்டு மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். மீனவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்களை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
தொழில் கடன்
இந்திய கடல் மீன் வள மசோதா 2021-ஐ திரும்பப்பெற வேண்டும். பாரம்பரிய மீனவர்களுக்கு கடல் எல்லையை வரையறுக்காதே. மீன் விற்பனையாளர்களுக்கு வட்டி இல்லா தொழில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராவணன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன், ஒன்றிய செயலாளர் டேவிட், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராதா, ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களும், 5 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர்.