கஞ்சா விற்ற வாலிபர் கைது

கல்வராயன்மலையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-09 16:02 GMT
கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்துரை தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சக்திவேல் (வயது 20) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த பேலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடம் இருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்