பூட்டிய வீட்டுக்குள் பிணம்; அரசு ஊழியர் மர்மசாவு

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த அரசு ஊழியர் உடலை போலீசார் மீட்டனர்.

Update: 2022-04-09 16:00 GMT
மண்டியா:

  மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கெஸ்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமா(வயது 38). இவர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ‘டி’-பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுமா தனது வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கெஸ்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்