கிருஷ்ணகிரியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக கிருஷ்ணகிரி வட மேற்கு மண்டலம் சார்பில் பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் பாபுசுந்தரம் (தர்மபுரி), சுதர்சனம் (திருப்பத்தூர்), ஜெயராஜ் சாமுவேல் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சட்ட செயலாளர் சீனிவாசன், மேற்கு மண்டல செயலாளர் மாதேசன், மண்டல மகளிர் அணி செயலாளர் ஆனந்தி மாலா ஆகியோர் பேசினர். இதில் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கும், மாணவர்களை நெறிப்படுத்தவும் புதிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சு பணியாளர்களையும், அடிப்படை பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.