பள்ளி மாணவனை தாக்கிய வாலிபர் கைது

சங்கராபுரம் அருகே பள்ளி மாணவனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-09 15:58 GMT
பள்ளி மாணவனை தாக்கிய வாலிபர் கைது
சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள மல்லபுரம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் அப்பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். பள்ளி முடிந்து மாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 25) என்பவர், மாணவரிடம், எந்த ஊரு என கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்