மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
வளவனூர்,
விழுப்புரம் த நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, கதை, நாட்டியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி டாக்டர் எமர்சன் ராபின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சுகந்தி திருஞானம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் பள்ளி கல்வி அதிகாரி சுகன்யா ராபின், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.