தேனி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

தேனி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2022-04-09 15:25 GMT
தேனி:
தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் சீரற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில பகுதிகளுக்கு பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், அரண்மனைப்புதூர் மெயின்ரோட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சிலர் காலிக்குடங்களுடன் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்