செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-04-09 15:11 GMT
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில், தடுப்பூசி போடுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நடவடிக்கை காரணமாக கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் நலன் கருதி நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலக வளாகம், தெருக்கள் மற்றும் வீடு, வீடாக சென்றுகொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்