கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

இலுப்பூர் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்;

Update: 2022-04-09 15:08 GMT
சிக்கல்:
நாகை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் அறிவுரையின் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு  டாக்டர் ஸ்ரீதர் பாபு தலைமை தாங்கினார். முகாமில் கால்நடை ஆய்வாளர் சாந்தி, பராமரிப்பு உதவியாளர் ஜீவா ஆகியோர் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசிகளை செலுத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி செயலாளர் செல்வேந்திரன் மற்றும்  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்