இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-09 15:05 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் காலனியை சேர்ந்தவர் ஆசீர்வாதம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொக்கிஷா (வயது 23). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெக்கிஷா நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலைகைப் பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக , பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு
செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்