பள்ளிபாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது-48 மதுபாட்டில்கள், மொபட் பறிமுதல்

பள்ளிபாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்கள், மொபட் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-04-09 14:49 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீசார் டி.வி.எஸ்.மேடு பகுதியில் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவரது வண்டியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரின் பையில் 48 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 
இதில் அந்த வாலிபர் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த அழகேசன் என்பதும், அவர் மதுபாட்டில்களை எஸ்.பி.பி. காலனி பகுதிக்கு விற்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்ததுடன், அழகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்