காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் குட்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாலக்கோடு பகுதியை சேர்ந்த மார்கண்டன் (36) என்பவரை கைது செய்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மார்கண்டனிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.