கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலரங்கம்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உயிர் வேதியியல்துறை சார்பில் இளங்கலை, முதுநிலை இறுதி ஆண்டு மாணவிகளுக்கான பயோ இன்பர்மேட்டிக்ஸ் குறித்த 2 நாள் பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். ரேமுரா பயாலஜிக்கல் தொண்டு நிறுவனர் விவேக் முரளி மற்றும் ஆய்வாளர் திவ்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவிகள் மடிக்கணினியை பயன்படுத்தி இணையத்தின் வாயிலாக நேரலையில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. இதில் உயிர்வேதியியல் துறை தலைவர் ஜெயந்தி, உதவி பேராசிரியர் கனகலட்சுமி, கவுரவ விரிவுரையாளர் தீபா மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.