கிருஷ்ணகிரியில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் அணி செயலாளரும், மண்டல தலைவருமான ரவிசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் சார்லஸ், மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.