ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலி

ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலியானான்.

Update: 2022-04-09 14:41 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் கிராமம் காலனியை சேர்ந்தவர் சண்முகம், டிரைவர். இவருடைய மகன் விஷ்வா (வயது 12). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலையில் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த விஷ்வா விளையாட சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மாணவன் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவன் கிடைக்க வில்லை. 
இந்தநிலையில் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமலை என்பவரின் கிணற்றில் மாணவன் விஷ்வா பிணமாக மிதந்ததை கண்டனர். இதுபற்றி தகவலறிந்த ராசிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் கயிறு மூலம் மாணவனின் உடலை மீட்டனர். இதுபற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்