போடி பரமசிவன் மலைக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
போடி பரமசிவன் மலைக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
போடி:
போடிக்கு தென்புறம் பரமசிவன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவில் தென் திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறும். கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த வருடம் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. போடி பெரியாண்டவர் கோவிலில் இருந்து கொடிமரம் பூஜை செய்யப்பட்டு நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்து சென்று மலை மேல் உள்ள பரமசிவன் கோவிலை அடைந்தது.அங்கு கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்தனர். இதையடுத்து காலை 10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் போடி ஜமீன்தார் வடமலைமுத்து ராஜைய பாண்டியன், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, முன்னாள் நகராட்சி துணை தலைவர் சங்கர், நிர்வாக கமிட்டி செயலாளர் பேச்சிமுத்து மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.