தேனியில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
தேனியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் தேனி பங்களாமேட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு ஆட்டோவை கயிறு கட்டி சிறிது தூரம் இழுத்து வந்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.