மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-09 13:30 GMT
தூத்துக்குடி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஜவஹர், சேகர், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சியினர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு நடத்தியும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்றும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அக்பர், பொருளாளர் பாலா, மண்டல வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி யோகேஷ், மாநகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்