போலீஸ் நிலையங்களில் தூய்மை செய்யும் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், காவல் அதிகாரி அலுவலகங்களில் தூய்மை செய்யும் பணி நடந்தது.

Update: 2022-04-09 13:14 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், காவல் அதிகாரி அலுவலகங்களில் தூய்மை செய்யும் பணி நடந்தது. 

தூய்மை செய்யும் பணி

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் நிலையங்கள், காவல் அதிகாரி அலுவலகங்கள், காவலர் குடியிருப்பு வளாகங்களை தூய்மை செய்ய உத்தரவிட்டு உள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், 7 துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், 39 சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் நிலையம், 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், ஒரு டவுன் போலீஸ் நிலையம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையம், 6 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம் மற்றும் ஆயுதப்படை அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன.

 காவல் துறை சார்ந்த இடங்களில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் மேற்பார்வையில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

இதையடுத்து போலீஸ் நிலையங்கள், காவல் அதிகாரி அலுவலக வளாகங்களை தூய்மை செய்தனர்.


சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், மாறன், வரதராஜ் ஆகியோர் முன்னிலையில்  தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

இதேேபால் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தூய்மை செய்யும் பணி நடந்தது. 

மேலும் செய்திகள்