குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்லும் அவலம்
சங்கமங்கலம் தாமரைக்குளம் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
சங்கமங்கலம் தாமரைக்குளம் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாயில் உடைப்பு
நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் ஒடாச்சேரியிலிருந்து கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக இரும்பு குழாய் மூலம் நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் நாகை நகராட்சி பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நாகை ஒன்றியம் சங்கமங்கலம் தாமரைக்குளம் பகுதி வழியாக செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1 மாதமாக உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள குளத்தில் வீணாக கலக்கிறது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தண்ணீர் இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தண்ணீர் கிடைக்க நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சங்கமங்கலம் தாமரைக்குளம் பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----