பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-09 12:44 GMT
நாகப்பட்டினம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பொதுக்குழு கூட்டம்
நாகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிமுல் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனஞ்ஜெயன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பூபதி வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். இதில் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணன் பேசினார்.
பழைய ஓய்வூதிய திட்டம் 
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறையில் பட்டதாரி அல்லாத உதவியாளர்களின் பதவி உயர்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
--

மேலும் செய்திகள்