கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீர்வு காணலாம்- மாவட்ட முதன்மை நீதிபதி

கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காணலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி கூறினார்.

Update: 2022-04-09 18:45 GMT
திருவாரூர்:-

கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காணலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

சென்னை ஐகோர்ட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் உத்தரவின்படி சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திருவாரூரில் நேற்று நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், சமரச தீர்வு மைய தலைவருமான சாந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 6-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. எனவே வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சமரச தீர்வாளர்கள் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், சார்பு நீதிபதி வீரணன், சார்பு நீதிபதியும், சமரச தீர்வு மைய செயலாருமான சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், வக்கீல் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் தினேஷ், நாம்கோ தொண்டு நிறுவன தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி பல்வேறு வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இதில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்