நாமக்கல் போலீஸ் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி

நாமக்கல் போலீஸ் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

Update: 2022-04-09 12:29 GMT
நாமக்கல்:
தமிழக காவல்துறையினர் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைபிடிக்க வேண்டும். இந்த நாளில் போலீஸ் நிலைய வளாகம், போலீசாரின் குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த இடங்களை சுத்தப்படுத்தும் பணியை செய்ய வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி  நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் மற்றும் போலீசாரின் குடியிருப்பு பகுதிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீசார் சுத்தப்படுத்தினர். இதேபோல் நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தை இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் தொடர்ந்து நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்