அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் 19ந் தேதி நடக்கிறது

Update: 2022-04-09 12:22 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பொதுமக்களின் அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட குறைதீர்வு கூட்டம் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. 

பொதுமக்கள் தங்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைகளை நேரடியாகவோ அல்லது வருகிற 13-ந் தேதிக்குள் (புதன்கிழமை) திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிடைக்கும் படி தபால் மூலுமாகவோ எழுதி அனுப்பலாம். 

இவை குறைதீர்வு கூட்டத்திற்கு முன் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
=======

மேலும் செய்திகள்