வேளச்சேரியில் ஆட்டோ டிரைவர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சி

வேளச்சேரியில் ஆட்டோ டிரைவர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுப்பட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update: 2022-04-09 08:40 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர்.நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). ஆட் டோ டிரைவர். இவரது மனைவி கல்பனா(30). நேற்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் படுத்து இருந்தார். இந்த நிலையில் ரமேஷ் வீட்டிக்கு சென்று பார்த்தபோது, கல்பனா கழுத்து அறுபட்ட நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் எட்டு தையல், கை விரல்களில் நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து வேளச்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க நபர் வீட்டினுள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த கல்பாவை கொலை செய்ய முயன்று தப்பியது தெரியவந்தது.இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்