வால்பாறை பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை

வால்பாறை பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடந்தது.;

Update:2022-04-09 10:49 IST
வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கடந்த 2-ந் தேதி முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கினார்கள். இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் தானதர்மங்கள் செய்வது, ஏழை-எளியோர்களுக்கு உதவிகள் செய்வது போன்ற பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். 

இந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் 1.15 மணியளவில் நடைபெறக்கூடிய தொழுகை சிறப்பு தொழுகையாக நடைபெற்று வருகிறது. 

அதன்படி  வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடைபெற்றது. வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் வெளிமாநிலத்தில் இருந்து வால்பாறை பகுதிக்கு வந்துள்ள வெளிமாநில முஸ்லிம்களும் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். 

இதேபோல் சேக்கல்முடி, சோலையாறு நகர், உருளிக்கல், சிங்கோனா, சோலையார் எஸ்டேட் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேலும் செய்திகள்