தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

சிவகிரியில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுததி உள்ளது.

Update: 2022-04-08 23:36 GMT
சிவகிரி:
சிவகிரி குமாரபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கோவிந்தராஜ் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி காளியம்மாள் (24). இவர்களுக்கு காசினி (6), மைசா (4) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கோவிந்தராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
 
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த கோவிந்தராஜ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காளியம்மாள் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்