பஞ்சாயத்து தலைவர்-உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து தலைவர்-உறுப்பினர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பஞ்சாயத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கூறி அங்குள்ள கிளார்க்கை கண்டித்து தலைவர் சிம்சன், துணைத்தலைவர் லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.