வாழைக்கன்றை நட்டு சாலைப்பணியாளர்கள் போராட்டம்

வாழைக்கன்றை நட்டு சாலைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-08 22:50 GMT
திருச்சி:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மாலை வாழைக்கன்றை நட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கோட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். சவுந்தர் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மேலும் செய்திகள்