செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மர்மநரை போலீசார் ேதடி வருகின்றனர்.

Update: 2022-04-08 21:46 GMT
நெல்லை,:
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 35). சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய நபர், தான் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தனது பெயர் மோகன்ராஜ் எனவும் கூறியுள்ளார். மேலும் அருணாசலத்திற்கு சொந்தமாக ஆலங்குளத்தில் உள்ள இடத்தை சேட்டிலைட் மூலமாக தான் பார்த்ததாகவும், அந்த இடம் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்திற்கு முன்தொகையாக ரூ.20 லட்சமும், மாத வாடகையாக ரூ.25 ஆயிரமும் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த நபர் அருணாசலம் நிலத்தின் பட்டாவை வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பச்சொல்லி கூறியுள்ளார்.

இன்னும் 23 நாட்களில் உங்கள் இடத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறும். அதற்கு முன்பதிவு தொகையாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அருணாச்சலம், அந்த மர்ம நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அந்த மர்மநபர் கூறியதுபோல், செல்போன் கோபுரம் அமைக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை. அப்போதுதான் அருணாசலத்திற்கு, தான் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.  இதையடுத்து அவர் இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ேமலும் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்