2 பேரிடம் பணம் கேட்டு மிரட்டல்; வாலிபர் கைது
நெல்லை தச்சநல்லூரில் 2 பேரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 33). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் பாரதி சக்தி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உலகம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராம் சூர்யா (21) என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, பாஸ்கர் உள்ளிட்ட 2 பேரிடமும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கர், தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து, ராம் சூர்யாவை கைது செய்தார்.