புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-04-08 21:02 GMT
சுகாதார சீர்கேடு 
வடக்கு தாமரைகுளத்தில் இருந்து சாமிதோப்புக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்ண வரும் நாய்களால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குப்பைகளை அகற்றவும், அங்கு  குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                         - விசால், அனந்தபத்மநாபபுரம்.

சீரமைக்க வேண்டிய சாலை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு பெருமாள் தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                        -முஹைதீன், இடலாக்குடி.

சேதமடைந்த மின் பெட்டி
கருமாவிளை-திக்கணங்கோடு சாலையில் புனத்திட்டை பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் தெருவிளக்கு சுவிட்சு மற்றும் மின்மீட்டர் பெட்டி உள்ளது. இந்த பெட்டி தற்போது சேதமடைந்து கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள் அதனை தொடும் அபாயம் உள்ளது. எனவே பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                -எட்வின் ஜோஸ், மத்திக்கோடு.

சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவிலில் இருந்து பாலமோர் செல்லும் சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் குண்டு, குழியுமாக  காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும்   வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                           -கவுரி, புத்தேரி.

சாலையை சீரமைக்க வேண்டும்
வேதநகர் பள்ளி எதிரில் இருந்து கன்னங்குளம் செல்லும் சாலை  மிகவும் சேதமடைந்தது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                        - ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

சேதமடைந்த மின்கம்பம்
கணபதிபுரம் பேரூராட்சி தெக்குறிச்சி நீண்டகரை காமராஜர் 2-ம் தெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். எனவே சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                       -சிவகரன், தெக்குறிச்சி.

மேலும் செய்திகள்