புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் குமரன்குடி கீழத் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டு விட்டது. இதனால்கடந்த சில நாட்களாக போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள்பழுதான குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், கும்பகோணம்.