அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.;

Update: 2022-04-08 20:45 GMT
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குண்டம் விழா
அந்தியூரில் உள்ள பிரசித்திபெற்ற பத்ரகாளி அம்மன் கோவில்   திருவிழா  கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு் வந்தது. மேலும் மகிஷாசூரமர்த்தினியை வதம் செய்யும் நிகழ்ச்சி, குண்டம் இறங்கும் விழா போன்றவை நடந்தது.
தேரோட்டம்
நேற்று தேரோட்டத்தையொட்டி காலை 6 மணி அளவில் பத்ரகாளி அம்மன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க 60 அடி உயரமுள்ள தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மாலை 6 மணிஅளவில் பொங்கல் வைத்து பூஜைகள் செய்து ஆடு பலி கொடுக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியில் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரிகள் சரவணன், ரங்கநாதன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பாடல் பாடியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதையொட்டி அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு் அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற 12-ந் தேதி அன்று தேர் நிலை நிறுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்