கூட்டுறவு சங்க செயலாளர், ஊழியர் பணியிடை நீக்கம்
உசிலம்பட்டியில் ரூ.2¼ கோடி கையாடல் செய்த விவகாரத்தில் கூட்டுறவு சங்க செயலாளர், ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் ரூ.2¼ கோடி கையாடல் செய்த விவகாரத்தில் கூட்டுறவு சங்க செயலாளர், ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ரூ.2¼ கோடி கையாடல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏ 1683 கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் செயலாளராக இருந்தவர் சுகந்தகுமார்(வயது 42). கணினி எழுத்தராக இருந்து வந்தவர் மாயி(40). இந்த சங்கத்தின் கணக்குகள் 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் தணிக்கை செய்யப்பட்டது.
இதில் சுகந்தகுமார் மற்றும் மாயி ஆகிய இருவரும் சேர்ந்து வசூல் செய்த சங்க பணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.2 கோடியே 36 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
பணியிடை நீக்கம்
இதனைத்தொடர்ந்து அந்த சங்கத்தின் நிர்வாக குழுவினர் கூட்டத்தில் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் திருமங்கலத்தில் உள்ள துணைபதிவாளரிடம் 2 நபர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கையாடல் செய்த இவர்கள் இருவர் மீதும் இச்சங்கத்தின் பொறுப்பு செயலாளராக இருந்து வரும் முத்துராமலிங்கம் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.