சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் பணி இடைநீக்கம்
சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம்:-
சேலம் மாநகராட்சி வருவாய் உதவி ஆணையாளர் (பொறுப்பு) எம்.வெங்கடேசன் (வயது 55). இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வெங்கடேசனை பணி இடை நீக்கம் செய்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவில், சேலம் மாநகராட்சியில் வருவாய் உதவி ஆணையாளர் பொறுப்பு பதவி வகித்து வரும் எம்.வெங்கடேசன் என்பவரை பொது நலனை கருத்தில் கொண்டு தற்காலிக பணி நீக்கத்தில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி விதிகள் படி அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்படுகிறது. பணி இடைநீக்க காலத்தில் அரசு விதிப்படி பிழைப்பூதியம் மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் பணி இடை நீக்க காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் அனுமதியின்றி சேலத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி உதவி ஆணையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.