குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-04-08 20:24 GMT
சேலம்:-
சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் குரு (வயது 34). இவர் கடந்த மாதம் 18-ந் தேதி அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதேபோன்று அன்னதானப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (27). செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் செவ்வாய்பேட்டை போலீசார் விக்னேசை கைது செய்தனர்.
தாதகாப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (28). சாலையில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக லோகநாதனை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
குரு, விக்னேஷ், லோகநாதன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பல்வேறு திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள 3 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்