பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு பெண் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்;
சாராய விற்பனை நடைபெறுவதாக புகார் வந்ததையடுத்து சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு பெண் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு போலீசாரும் துணைபோவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக டி.ஐ.ஜி. கயல்விழி விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் இது தொடர்பாக சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்தார்.
எச்சரிக்கை
மேலும் இதேபோல் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு போலீசார் உடந்தை என்று தகவல் வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.