மின்னல் தாக்கி பசுமாடு செத்தன

மின்னல் தாக்கி பசுமாடு செத்தன.

Update: 2022-04-08 19:19 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மேலத்தெருவை சேர்ந்த குமாரின் மனைவி செல்வராணி (36). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் உள்ள தென்னை மரத்தடியில் 2 பசு மாடுகளை கட்டி வைத்துள்ளார். அப்போது மதியம் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தபோது, மின்னல் தாக்கி 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும் அவர் மின்னல் தாக்கி உயிரிழந்த மாடுகளுக்கு அரசின் இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்