நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் திடீர் மழை
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் திடீர் மழை பெய்தது.
நொய்யல்,
கரூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று 102 டிகிரி வெயில் பதிவானது. இந்தநிலையில் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென இடி, காற்றுடன் மழை பெய்தது. மேலும், சில்லென்று காற்று வீசியதால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் சாலையோர வியாபாரிகள் மழை பெய்ததால் அவதியடைந்தனர்.
குளித்தலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.