மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்தவர் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-04-08 19:14 GMT
கரூர், 
மாற்றுத்திறனாளி
புகழூர் செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 9 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் ராயனூர் பகுதியில் தங்கி சந்தியா வசித்து வந்துள்ளார். அப்போது விடியல் கிராம குழுவிடம் கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (35) என்பவர் அந்த குழுவில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருநாவுக்கரசுவுக்கும் சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
பணம், நகை மோசடி
இதையடுத்து, சந்தியாவை திருமணம் செய்து கொள்வதாக திருநாவுக்கரசு கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சந்தியா தான் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் ¾ பவுன் நகை ஆகியவற்றை திருநாவுக்கரசுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சந்தியாவை திருமணம் செய்யாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசில் சந்தியா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்த திருநாவுக்கரசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்