புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாமரைக்குளம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் விபத்து ஏற்படும் இடத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் எனவும் அதுவும் 6 மாதங்களில் வழக்கு தொடர வேண்டும் என மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அரியலூரில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.