தேசிய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசிய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-08 18:58 GMT
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தனியார் சிமெண்டு ஆலை தேசிய தொழிலாளர் சங்கம் சார்பில்  நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு கடந்த 2020-2021 வழங்க வேண்டிய தீபாவளி போனசை உயர்த்தி தர வேண்டும். ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலையின் உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள இடங்களில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களின் வருடாந்திர மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்திவழங்க வேண்டும். நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஆலையிலுள்ள சிற்றுண்டிகளில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் டி.வி.அம்பலவாணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்