மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) நேற்று நடந்தது. முகாமினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, மாவட்ட உள்ளடக்கிய கல்வி திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். முகாமில் உதவி உபகரணங்கள் தேவைப்படும் பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பிறப்பு முதல் 18 வயது வரையிலான 30 மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களை டாக்டர்கள் மருத்துவ மதிப்பீடு செய்து முடநீக்கியல் சாதனம், நடைபயிற்சி சாதனம், சிறப்பு சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, பிரைய்லி கிட் மற்றும் செவி துணைக்கருவி ஆகிய உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளை தேர்வு செய்தனர்.