லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுக்கு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2022-04-08 18:49 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஏட்டாக கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றினார். அப்போது ஒரு வழக்கு சம்பந்தமாக வந்த நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கடந்த 29-12-2008 அன்று லஞ்ச பணத்தை சீனிவாசனிடம் இருந்து வாங்கிய போது, கோவிந்தராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர்.  இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை நீதிபதி ஹாஜிரா விசாரித்து, லஞ்சம் வாங்கிய ஏட்டு கோவிந்தராஜூக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவர் தற்போது சிவகாசி நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்