காதல் கைகூடாத விரக்தியில் உயிரை மாய்த்த இளம்பெண்
ராஜபாளையம் அருகே காதல் கைகூடாத விரக்தியில் உயிரை இளம்பெண் மாய்த்தார். தற்கொலைக்கு காதலன் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே காதல் கைகூடாத விரக்தியில் உயிரை இளம்பெண் மாய்த்தார். தற்கொலைக்கு காதலன் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 25). இவரும் 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீசுவரனுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அந்த இளம்பெண், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதலன் தூக்குப்போட்டார்
இதுகுறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே காதலி இறந்த தகவல் அறிந்த முனீஸ்வரன் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். பின்னர் நேற்று வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.