ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-08 18:49 GMT
விருதுநகர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் சேதுராமசாமி தலைமையிலும், மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 2019 முதல் 2021-ம் ஆண்டுவரை பயிர் காப்பீடு தொகை வரவேண்டிய நிலை உள்ளதால் காப்பீட்டுத்தொகையை உடனே பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்