நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு நடைபயணம்
நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் சிந்தாமணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இதில் சிந்தாமணி ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா வரவேற்றுப்பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் தலைமை தாங்கி, நடைபயண விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சிந்தாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அன்பு, ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராம மகளிர் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், பெண்கள் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் நடைபயண பிரசாரத்தில் கலந்து கொண்டனர். சிந்தாமணி கிராமத்தின் முக்கிய வீதிகளில் நடைபயண விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. முடிவில் ஊராட்சி செயலாளர் இந்திரா நன்றி கூறினார்.