மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு

மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

Update: 2022-04-08 18:36 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள பணிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 2-ம் பகுதியின் கீழ் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 கிராமங்கள் தேர்வாகியுள்ளன. அதில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்